அரசியல்உள்நாடு

ஜோன்ஸ்டனை சந்திக்க சிறைச்சாலைக்கு சென்ற மகிந்த

விளக்கமறியலில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

ஜொன்ஸ்டன் பெர்னான்டோ குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யாது பாகங்கள் எடுத்துவரப்பட்டு உள்நாட்டில் மீள் தயாரிக்கப்பட்ட அதிசொகுசு வாகனமொன்று கொழும்பு – ஹில்டன் ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.

அவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

Related posts

BAR லைசன்ஸ் விவகாரம் – ரணிலுக்கு எதிராக நீதிமன்றில் மனு

editor

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு

சீமெந்தின் விலையை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம்

editor