அரசியல்உள்நாடு

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் பெண் வேட்பாளர் சமர்பித்த பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் முரண்பாடுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக மாத்தளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆசிரி எரங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை குடியுரிமை பெற்ற இந்த பெண் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுழைந்த முதல் வெளிநாட்டவர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பாளராக கலேவெல பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஜேர்மனிய பெண் கடந்த புதன்கிழமை (18) செலுத்தினார்.

தனது அரசியல் ஈடுபாட்டின் மூலம் இலங்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோத சிகரெட்களுடன் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

editor

ஹர்த்தாலை முன்னிட்டு தமிழ் கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை!

வெலிகம மத்ரஸாவில் தீப்பரவல்!