வகைப்படுத்தப்படாத

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு

(UTV|INDIA)-ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி அவரது நினைவிடத்துக்கு அ.தி.மு.க. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் இருந்து வந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு செப்டம்பர் ஆம் திகதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் டிசம்பர் 5 ஆம் திகதி காலமானார்.

இந்நிலையில்  ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் மரணம் இந்தியாவை உலுக்கிய சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Rs. 95 million through excise raids in 2019

காவற்துறை சீருடையுடன் இருவர் கைது.

இரசாயன ஆலையில் வெடி விபத்து – 4 பேர் உயிரிழப்பு