வகைப்படுத்தப்படாத

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி கற்கைகள் பிரிவு

(UDHAYAM, COLOMBO) – ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி கற்கைகள் பிரிவொன்றை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிங்கள மொழி, வரலாறு மற்றும் இலங்கையின் கலாசாரம் என்பவற்றை அறிந்து கொள்வதற்கு விருப்பம் கொண்டிருக்கும் இந்திய மற்றும் சார்க் நாடுகளுக்கு உட்பட்ட ஏனைய நாட்டு மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலேயே இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த கருணாதிலக இதனை தெரிவித்தார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி கற்கைகள் பிரிவொன்றை அமைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக மேலும் குறிப்பிட்டார்.

Related posts

இவ் வருடத்தில் புதிய 100 சதோச விற்பனை நிலையங்கள்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

Gary Oldman to star in David Fincher’s ‘Mank’