வணிகம்

ஜப்பானுக்கான ஏற்றுமதியினை அதிகரிக்க நடவடிக்கை…

(UTV|COLOMBO)-ஜப்பானுக்கான ஏற்றுமதியினை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவராலயத்துடன் இணைந்து, ஜப்பானில் உள்ள இறக்குமதியாளர்களைக் கொண்ட குழுவொன்றை இலங்கைக்கு வரவழைக்கும் செயல்பாட்டில், ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக, ஜப்பானில் இருந்து வர்த்தக குழுவொன்று அடுத்த மாதம் மூன்றாம் திகதி இலங்கை வரவுள்ளது.

இதன்போது, இந்த குழுவினர் இலங்கையில் உள்ள ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

HNB AppiGo : வர்த்தக தளம் ஒருமாத குறுகிய காலத்திற்குள் மூன்று மடங்கு அதிகரிப்பு

ஏற்றுமதி, சுற்றுலா துறைகளை மேம்படுத்த தயார்

‘Super night Selfies’ சிறப்பம்சத்தை உள்ளடக்கியுள்ள vivo V19