உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை அடுத்து ஒரு மீட்டர் (மூன்று அடி) உயரம் வரை சுனாமி அலைகள் உருவாக்கக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த அலைகள் உடனடியாக வரக்கூடும் என்பதால் கடலோரப் பகுதிகளைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்திப்பட்டுள்ளது.

இதேவேளை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

90 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்

editor

தனது சகோதரிக்கு கூடுதல் பொறுப்புகளை பகிர்ந்தளித்த வடகொரிய ஜனாதிபதி

பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதி

editor