உலகம்

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாய்ச்சி

ஜப்பானை ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் (Liberal Democratic Party) தலைவராக முன்னாள் உள்துறை அமைச்சர் சனே தகாய்ச்சி (Sanae Takaichi) தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

அப்பதவிக்கு அவரும் வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமியும் (Shinjiro Koizumi) போட்டியிட்டனர்.
விளம்பரம்

கட்சி உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட வாக்களிப்பில் தகாய்ச்சிக்கு 185 வாக்குகளும். கொய்சுமிக்கு 156 வாக்குகளும் கிடைத்தன.

செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி, தன்னுடன் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களையும் தோற்கடித்து ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவியை வென்றார்.

இது கட்சித் தலைமைப் பதவியில் அவர் வகிக்கும் மூன்றாவது வெற்றியாகும்.

எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒன்றுகூடலில் சனே டகாய்ச்சி ஜப்பானின் புதிய பெண் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அண்டார்டிகா : 58 பேருக்கு கொரோனா தொற்று

உக்ரைன் – ரஷ்யா மோதல் : தயாராக நேட்டோ போர்விமானங்கள்

சந்திராயன் 03க்கு குவியும் வாழ்த்து