உள்நாடு

ஜனாதிபதியின்  புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என கோரிக்கை

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படம் அல்லது கையினால் வரையப்பட்ட அவரின் உருவப்படங்களை பொது இடங்களில் காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வரையப்பட்ட உருவப்படம், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை கண்காணிப்பின்றி பாதையோரங்களில், பொது விழாக்கள் நடைபெறும் இடங்களில் காட்சிப்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தமது உருவத்தை வரையும் நபர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஜனாதிபதி, அவ்வாறு செய்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு குறித்த தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

முஸ்லிம் அமைச்சர்கள் இல்லையென அதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

கொழும்பு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

மஹிந்தவுக்கு முன், கோட்டபாயவை கடுமையாக தாக்கி பேசிய தேரர்