சூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் இன்றுடன் நிறைவு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இன்று(06) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் கட்டுப் பணத்தை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 5ஆம் திகதி மாலை வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 16 வேட்பாளர்களும் சுயாதீனமாக 14 பேரும் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை நாளை (07) முன்னெடுக்கப்படவுள்ளதுடன், காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரையான 2 மணித்தியால காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கை அரசியல் நெருக்கடிக்கு முடிவு – ஐ.நா பொதுச் செயலர் வரவேற்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

பிரபல நடிகர் மற்றும் பாடகர் திடீரென மரணம்