உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் களமிறங்கியே தீருவார்- மொட்டு அமைச்சர்

(UTV | கொழும்பு) –

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கியே தீருவார்” என அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த விடயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ரணில் மொட்டுக் கட்சி சார்பாகவா அல்லது பொதுவேட்பாளராகவா போட்டியிடுவார் என்பதை ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பின்னர்தான் அறியத்தருவோம்.

நாட்டிலுள்ள தற்போதைய அரசியல் தலைவர்களில் நாட்டுக்குத் தலைமை தாங்கக் கூடிய சிறந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே.

இதை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பறைசாற்றிக் காட்டும்” என தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்திய சேதனப் பசளை இலங்கையில் பாவிக்க உகந்தது

சகல அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளும் இன்று சுகயீன விடுமுறையில்

கடதாசி தட்டுப்பாடு : பரீட்சைகள் ஒத்திவைப்பு