சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மாளிகையை பல்கலைக்கழகங்களாக மாற்றுவோம் – சஜித் உறுதி

(UTVNEWS COLOMBO) – ஜனாதிபதி மாளிகைகளை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று தெரிவித்தார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு தெரிவித்த அவர், ஜனாதிபதியின் வீடு தேவையில்லை என்றும், இதுபோன்ற பொது இடங்களுக்கு பொது பணத்தை வீணடிக்கக்கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் தனது மாதாந்த கொடுப்பனவை மக்களுக்கு வழங்குவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.

Related posts

இரத்த தான நிகழ்வில் 700ற்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் பங்கேற்பு

10 மாத குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சித்த பெண்

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை