அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திற்கு

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (02) அஞ்சல் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன.

அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அஞ்சல் திணைக்களம், வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமது திணைக்களத்திற்கு கிடைக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்தை நாளை முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர்  ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

Related posts

கையிருப்பில் இருந்த சமையல் எரிவாயு நிறைவு – லிட்ரோ

உதயசூரின் சின்னத்தில் உதயமான தமிழர் ஐக்கிய முன்னணி

தயாசிறி ஜயசேகர எம்.பி எழுதிய கடிதம் சபாநாயகருக்கு பறந்தது

editor