அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 2460 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை) 2,460 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 930 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,530 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 62 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

 உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு : பெறுமதி 15,000 கோடி ரூபா

இலங்கைக்கு வந்த தாய்லாந்து பிரதமர்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணைந்த புதிய விமானம்!