அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை) 4,215 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,360 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2,737 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 30 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 88 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

‘பூஸ்டர் தடுப்பூசி பெற்றிருந்தால் மட்டுமே’ முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக கருதப்படும்

இன்றும் உச்ச பாதுகாப்புக்கு மத்தியில் 9 சடலங்கள் அடக்கத்திற்கு

யாழ்ப்பாணத்து மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன் – அர்ச்சுனா