அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை நள்ளிரவுடன் நிறைவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் நாளை (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரித்தார்.

தேர்தல் ஆணையாளர் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.

“பிரச்சார காலம் முடிவடைந்தவுடன் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாது.

எந்தவொரு பிரச்சாரத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – மண்டைதீவு விடயத்திலும் மாற்றமில்லை – ஈ.பி.டி.பி வலியுறுத்து!

மக்கள் இரசியமாக ரணிலுக்கு வாக்களிக்க இருக்கின்றனர் – ஆஷு மாரசிங்க

editor

டொலர் ஒன்றுக்கான ஊக்குவிப்புத் தொகை அதிகரிப்பு