சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லாவை போட்டியிடுமாறு வேண்டுகோள்

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை போட்டியிடுமாறு சபாப் குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த வேண்டுகோளை சபாப் குழுமத்தின் தலைவர் எம்.ஐ.எம்.நாசர் வித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழ்நிலையில் சிறுபான்மை சமூகத்தின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக களமிறங்க வேண்டும்.

கடந்த காலங்களில் இந்த நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெற்ற வன்முறைகளுக்காக சரியான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இந்த வகையில் நமது சமூகத்தின் பிரச்சினைகளையும் உரிமையையும் சொல்வதற்காக சர்வதேச மட்டத்துக்கு தெரியப்படுத்துவதற்காக ஒரு முஸ்லிம் வேட்பாளர் களமிறங்க வேண்டும்.

Related posts

சஞ்சய் ராஜரட்ணம் சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம்

BREAKING NEWS – நள்ளிரவு முதல் மின் கட்டணங்களை 20% குறைக்க தீர்மானம்!

editor

சலிந்த திஷாநாயக்க காலமானார்