நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் இன்று (27) காலை பாராளுமன்ற வளாகத்தில் அவசரக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பர்.
