உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம்

(UTV | கொழும்பு) – ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாவட்டத் தலைவர்கள் தொடர் கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

Related posts

பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று

‘எஞ்சியுள்ள வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? – ரிஷாட் கேள்வி.

சஜித்தை சந்தித்த வேலையற்ற பட்டதாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் சங்கங்களினது பிரதிநிதிகள்

editor