சூடான செய்திகள் 1

ஜனாதிபதி செயலகத்தில் இன்றிரவு 7 மணிக்கு

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவானது இன்று(11) இரவு 07.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளது.

நிகழும் அரசியல் நிலைமை மற்றும் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாட உள்ளதாக முன்னணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

பிரதமர் தலைமையிலான குழுவினர் காங்கேசன்துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்

வெலே சுதாவின் மரண தண்டனை உறுதி…

4பேர் கொண்டவர்கள் வற் வரி எவ்வளவு செலுத்த வேண்டுமென தெரியுமா?