வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு பிணை

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலக காரியாலயத்தின் முன்னாள் மேலதிக செயலாளரான கே.டீ. குணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அவர் இன்று (08) பிணையில் விடுதலை செய்யப்பட்ட்டுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு காலத்தில் வாகனங்கள் கொள்வனவின் போது 179 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சந்தேகநபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 05 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றைய சந்தேகநபரான ஜனாதிபதி செயலக காரியாலயத்தின் முன்னாள் கணக்காளர் எல்.பீ. குணரத்னவின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த நீதவான் அவரை நாளைய தினம் (09) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Showery and windy conditions to enhance until July 20

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வள்ளங்களுக்கான தண்டப்பணம் அதிகரிக்கப்படும்

இருளில் மூழ்கிய வெனிசூலா:15 பேர் உயிரிழப்பு