உள்நாடுவணிகம்

ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவில் 4 விருதுகள் வென்ற அக்பர் பிரதர்ஸ்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் நடத்தப்பட்ட 27ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2024/2025 (Presidential Export Awards) இல் அக்பர் பிரதர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நான்கு முக்கிய விருதுகளைப் பெற்றது

நேற்று முன்தினம் (11) BMICH இல் இடம்பெற்ற இவ்விருது விழாவில், ஆண்டின் நிகர அந்நியச் செலாவணி ஈட்டும் நிறுவனத்திற்கான ஒட்டுமொத்த விருதை வென்றது.

அதன் “அக்பர் வர்த்தகநாமம்” ஆனது, வருடத்தின் சிறந்த தேயிலை ஏற்றுமதியாளர் விருது (பாரிய பிரிவு) மற்றும் சிறந்த தேயிலை ஏற்றுமதியாளர் (பாரிய பிரிவு) மெரிட் விருது ஆகியவற்றின் மூலம், உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்த இலங்கை வர்த்தகநாமமாக இந்நிறுவனம் கௌரவிக்கப்பட்டது.

இந்த கௌரவங்கள் மூலம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்த அங்கீகாரமானது, அக்பர் பிரதர்ஸின் தரம், இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரம், உலக அரங்கில் இலங்கை தேயிலையை உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகள் ஆகியவற்றில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது என, நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிறுவனத்தின் சாதனைக்கு அதன் குழுவினரின் அர்ப்பணிப்பும், நிறுவுனர்களால் முன்னெடுத்துச் செல்லும் நேர்மை மற்றும் அதற்காக வழங்கும் மதிப்பு ஆகியவையே காரணம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related posts

கிணற்றில் தவறி வீழ்ந்து இரண்டு வயது குழந்தை மரணம் – ஏறாவூரில் சோகம் | வீடியோ

editor

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்புறத்தில் மோதி கார் விபத்து – ஒருவர் பலி

editor

அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்