அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவை வரவேற்க தயாராகிவரும் சீனா

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீனப் பயணம் இரு நாடுகளுக்கும் மிக முக்கியமான பயணமாக இருக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுக்கு 2025, ஜனவரி 14 முதல் 17 வரையில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அந்நாட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவியேற்ற பிறகு சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இது என்றும், சீன-இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், சீனப் பிரதமர் லீ சியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிலைக்குழுவின் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கும், அரசியல் புரிதலை மேம்படுத்துவதற்கும், சீன-இலங்கை மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கும் இலங்கை ஜனாதிபதியின் வருகை முக்கியமானதாக இருக்கும் என்று சீன செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் – விசாரணைக்கு குழு!

editor

பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை!

ரணில் அநுரவுடன் டீல் செய்வதற்கு முன்னர் கடவுச்சீட்டு மற்றும் விசா வரிசையை இல்லாது செய்யவும் – சஜித்

editor