அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (17) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காகவே அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த பேச்சுவார்த்தை தற்போது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை காலமானார்

இன்று அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – 6 வயது சிறுமி பலி

editor

பாராளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 % சதவீத பலத்தை பெற முடியாது