இறைச்சிக்காக காரில் ஆடு ஒன்றினைக் கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிபென்ன மற்றும் பதுரலிய பகுதியைச் சேர்ந்த இருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ளனர்.
குறித்த சிற்றூந்தில் ஜனாதிபதியினுடைய உருவப்படம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சின்னம் ஆகியவை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்துக்கு இடமாகப் பயணித்த சிற்றூந்தை வழிமறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவ்வாறு இருவரும் குறித்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
முன்னதாக, இதே போன்ற குற்றச்செயலுக்காக அவர்கள் குறித்த சிற்றூந்தை பயன்படுத்தி வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் மத்துகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.