அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ஜனாதிபதி அநுர தலைமையில் 2026 வரவு செலவு திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இங்கு, போக்குவரத்துத் துறை தொடர்பில் தனித்தனியாக, நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், கிராமிய வீதிகள் ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், துறைமுகங்கள் மற்றும் அதன் செயற்பாடுகளுக்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள், அந்த ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு கேட்டறிந்தார்.

கிராமிய வீதிகளில் பஸ்களை இயக்குவது இலாபகரமானதாக இல்லாவிட்டாலும் அந்த சுமையை அரசாங்கம் ஏற்று மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தைத் திட்டமிடும்போது, நாட்டை தற்போதைய நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முக்கியமான துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் ஆகிய துறைகளை நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையிலான திட்டங்களில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி
அமைச்சர் பொறியியலாளர் ஜனித ருவன் கொடிதுவக்கு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சு, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

ஐ.சி.சி தரவரிசையில் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்

ராகம, படுவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor

போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் வழக்குத் தாக்கல் செய்வோம் – உதய கம்மன்பில

editor