அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர இன்று மாலைத்தீவு பயணம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாலைதீவில் தங்கியிருப்பாரென தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன் இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ளன.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு இவ்வருடத்துடன் 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதியின் மாலைதீவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் இந்தப் பயணத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலர் இணைந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

வரவு-செலவுத்திட்டத்தை வெல்ல வைக்க பசில் மும்முரம்- சனிக்கிழமை நாடு திரும்புகிறார்

MT New Diamond கப்பல் தொடர்பில் இன்று ஆய்வு

மே 9 தாக்குதல் : நாமல் CID இல் வாக்குமூலம்