உள்நாடு

ஜனவரி 15 முதல் வடக்கிடக்கான ரயில் சேவை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –     பழுதடைந்துள்ள புகையிரதப் பாதையை சீரமைக்கும் பணிகள் காரணமாக ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவை நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடை க்கலநாதன் நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை மன்னார், யாழ்ப்பாணம், காங்கேசன் துறை ஊடாக பயணிக்கக்கூடிய ரயில் பாதையை இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நல்ல பாதையாக பெற்றுத்தர முடியுமெனவும் தெரிவித்தார்.

மேலும், புனரமைப்பு பணிகள் ஆரம்பிப்பதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடை க்கலநாதனுடன் இது தொடர்பில் ஆலோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Related posts

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கலந்துரையாடல்

editor

வழமைக்குத் திரும்பும் பேருந்து சேவைகள்

03 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு