வணிகம்

சோளச் செய்கையாளர்களுக்கு அதிகளவு அறுவடை

(UTV|COLOMBO)-கிழக்கு மாகாண சோளச் செய்கையாளர்களுக்கு இம்முறை அதிகளவு அறுவடை கிடைத்ததாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பழங்கள் மற்றும் ஏனைய தானியங்களை உற்பத்தி செய்வதற்கான ஊக்குவிப்புகள் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதனடிப்படையில், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விதைகளை வழங்கி வருவதுடன், செய்கைக்குப் பொருத்தமான ஆலோசனைகளை வழங்குவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் அதிகரிப்பு

அம்பாறையில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

திருகோணமலை சந்தையில் பாலைப்பழம்