தனது சொந்தக் கிராமத்தில் தங்கியிருக்கவே விருப்பமென்பதுடன், தனது கிராமத்தை விட்டு வெளியேறி கொழும்புக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இருப்பினும் தனது தேவைகளை பொறுத்து கொழும்புக்குச் செல்ல வேண்டி நேரிடலாமெனவும் அவர் கூறினார்.
கொழும்பில் மீண்டும் குடியேறியுள்ளதாக பரவும் வதந்தி குறித்து தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி கொழும்புக்கு திரும்பும் எண்ணம் தனக்கு இல்லை.
இருப்பினும், தனது தேவைகளை பொறுத்து கொழும்புக்கு செல்ல வேண்டியிருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
மீண்டும் தான் கொழும்புக்குத் திரும்புவதாக பரவும் வதந்தி குறித்து சிலர் விசாரிப்பதாகவும், கொழும்புக்கு திரும்பப்போவதில்லை என்பது மட்டுமே தனது கருத்து என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மகிந்த ராஜபக்ச நுகேகொடை பகுதியில் தனது நண்பரின் வீட்டில் தங்கியுள்ளதாகவும், அரசாங்கத்திற்கு பயப்படாமல் ராஜபக்ச குடும்பம் யார் என்பதை அறிந்த நண்பர் தங்களுக்கு வீட்டினை வழங்கியதாகவும் நாமல் விளக்கமளித்திருந்தார்.
மகிந்த தற்போது கொழும்புக்கு வந்திருந்தாலும், தங்காலை கார்ல்டன் இல்லத்திலும், கொழும்பில் உள்ள நுகேகொடை இல்லத்திலும் மாறி மாறி தங்குவார் என்றும் நாமல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
