சூடான செய்திகள் 1

சேனா படைப்புழு தாக்கம் – விலங்குகளிற்கு உணவுத் தட்டுப்பாடு

(UTV|COLOMBO)-சேனா படைப்புழு தாக்கம் காரணமாக சோளப் பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் விலங்குகளிற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, அரச கால்நடை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது .

விலங்குகளுக்கான உணவு உற்பத்திற்கு பிரதானமாக சோளம் பயன்படுத்தப்படுவதாக, அரச கால்நடை வைத்திய சங்கத்தின் தலைவர் டொக்டர் ருவன் விக்ரமஆரச்சி குறிப்பிட்டுள்ளார்.

சேனா படைப்புழுவின் தாக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோளப் பயிர்ச்செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அரச கால்நடை வைத்திய சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று காலை இடம்பெற்ற பயங்கர விபத்து!!

ஹீனடியன சங்கா கைது

உதவி கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய அழகப்பன் சௌந்தரராஜன் அண்மையில் ஓய்வு பெற்றார்.