உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்று (6) யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள், சிசுக்கள் உள்ளிட்ட 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-பிரதீபன்

Related posts

சுற்றுலா விடுதிகள், முகாம்கள் நாளை முதல் திறப்பு

விவாகரத்து தொடர்பில் புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்த அனுமதி

குறைந்த வயதினை உடைய சுமார் 100 ஜோடிகள் கைது