கிசு கிசு

சூடு பிடிக்கும் ‘பிள்ளையான்’

(UTV | கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்குமாறும் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்குமாறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் போராளியுமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பிள்ளையானுக்கு எந்த அமைச்சுப்பொறுப்பு வழங்கப்படும் என்றோ அமைச்சரவை அந்தஸ்து அல்லது அந்தஸ்தற்ற அமைச்சு வழங்கப்படுமா? என்பது குறித்து எதுவும் தெரியாது என்று பிள்ளையானுக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

எனினும் தேர்தலுக்கு முன்னர் தமது கட்சிக்கு அமைச்சு பதவி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் உறுதியளிக்கப்பட்டிருந்ததாக பிள்ளையானின் தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

இதேவேளை பிள்ளையானுக்கு சட்டரீதியாக அனுமதி வழங்கி அவரை கண்டியில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்க செய்வது தொடர்பில் நேற்று(10) கொழும்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே பிள்ளையானுக்கு எதிராக சட்டமா அதிபர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

WhatsApp ல் தகவல் அனுப்புவதற்குத் தடை…

குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப கஷ்டம்- செல்லப்பிராணி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் மக்கள்

இலங்கையர்களை கதி கலங்க வைத்த அந்த நபர்…