உலகம்

சூடு பிடிக்கும் தைவான் – சீனா

(UTV |  தைபே) – சீனாவும், தைவானும் 1949-ம் ஆண்டு பிரிந்து விட்டன. ஆனாலும் தைவானை சீனா தனது அங்கமாக கருதி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது.

தைவானோ தான் ஒரு சுதந்திர நாடு என்று நினைக்கிறது. தைவானை அச்சுறுத்தி தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சீனா துடிக்கிறது. இதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறது.

இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் தைவான் அருகே தனது போர் விமானங்களையும், குண்டு வீசும் விமானங்களையும் சீனா நேற்று முன்தினம் பறக்க விட்டுள்ளதாக தைவான் குற்றம் சாட்டுகிறது. இந்த வகையில் நேற்று முன்தினம் சீனாவின் 10 விமானங்கள், தைவான் ஜலசந்தியில் உள்ள இடைநிலைக்கோட்டின் அருகே (சீனாவை பிரிப்பது) பறந்ததாக தைவான் ராணுவ அமைச்சகம் சொல்கிறது.

இந்த 10 விமானங்களில் 6 விமானங்கள் ஷென்யாங் ஜே-11 ரகம், 4 விமானங்கள் ஜே-16 ரகம் என தைவான் மேலும் கூறுகிறது. இதன் காரணமாக அங்கே புதிய பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. தைவானுக்கு தென்மேற்கில் 4 செங்டு ஜே-10 ரக போர் விமானங்களும், ஒரு ஒய்-8 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானமும், 3 எச்-6 குண்டு வீசும் விமானங்களும் நேற்று முன்தினம் காணப்பட்டதாகவும் தைவான் ராணுவம் கூறுகிறது.

Related posts

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மீண்டும் பரிந்துரை

உலக சந்தையில் எகிறும் மசகு எண்ணெய் பீப்பாயின் விலை

நவால்னிக்கு சிகிச்சை அளித்த ரஷ்ய மருத்துவர் திடீரென உயிரிழப்பு