காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். அசுத்தமான உணவு அல்லது குடிநீரைக் குடிப்பதன் மூலம் பரவுகிறது.
சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 170-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
தலைநகரான கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
ஆனால், வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூடானின் சுகாதார மந்திரி ஹைதம் இப்ராஹிம் கூறுகையில், “கடந்த நான்கு வாரங்களில் கார்ட்டூம் பகுதியில் சராசரியாக 600 முதல் 700 வரை காலரா நோய்த் தொற்று பதிவாகியுள்ளது” என்றார்.
காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். அசுத்தமான உணவு அல்லது குடிநீரைக் குடிப்பதன் மூலம் பரவுகிறது.
இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். காலரா நோயானது தற்போது சூடானில் வேகமாக பரவி வருகிறது.