உள்நாடுவிளையாட்டு

சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஓய்வை அறிவித்தார்

(UTV | கொழும்பு) –   2022 லேவர் கிண்ண தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் ஆவார்.

முன்னாள் நம்பர் ஒன் வீரரான பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

இதில் 8 விம்பிள்டன் மகுடமும் அடங்கும். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர்.

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவீஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா, பிரான்ஸ், விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் விளையாடி உள்ள ரோஜர் பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அடுத்த வாரம் நடைபெறவுள்ள லேவர் கோப்பை அவரது இறுதி போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Related posts

புதிய கல்வி மறுசீரமைப்பில் மாணவர்களுக்கு இரண்டு இன்டர்வெல்கள் குறித்து வெளியான தகவல்

editor

பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நிதி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

எரிபொருள் விநியோகம் – முக்கிய அறிவிப்பு