சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தீப்பரவலில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில் உள்ள கிரான்ஸ்-மாட்டானா நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றிலேயே அந்த நாட்டு நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டு தீப்பரவல் ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் இது ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்லவென முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுவதாக சர்வதேச ஊடங்கள் குறிப்பிடுகின்றன.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
