உள்நாடு

சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் – வெளியான தகவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், தேவையான சட்ட நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் இது அமுலுக்கு வரும் எனவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும்.

மேலும், நாட்டில் நீண்ட காலம் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என அவர் கூறினார்.

Related posts

தங்கம் கடத்திய அலி சப்ரி தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு !

தினுகவின் சடலம் இன்று இலங்கைக்கு

பல்வேறு விடயங்கள் பிரதமர் ஹரிணியின் கவனத்திற்கு | வீடியோ

editor