வணிகம்

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு கொரிய அரசாங்கம் நிதியுதவி

(UTV|கொழும்பு) – சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 10.96 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த தொகை இந்த வருடத்தில் வழங்கப்படும் என இலங்கைக்கான கொரிய தூதுவர் லியோன்லி தெரிவித்துள்ளார்.

குச்சவெளி சுற்றுலா வலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக 5.36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.

மாத்தளை எடன் வல சமூக சேவை சுற்றுலா கிராம அபிவிருத்தி திட்டத்திற்காகவும் 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

தானியங்களை களஞ்சியப்படுத்த களஞ்சியசாலை

புற்றுநோய் தேங்காய் எண்ணெய் – சுங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

SLIIT நடாத்திய SKIMA 2017