உள்நாடுசூடான செய்திகள் 1

சுற்றுலா வீசாவை அதிரடியாக தடை செய்தது இலங்கை!

(UTV | கொழும்பு) –  வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் சுற்றுலா வீசா ஊடாக ஓமான் நாட்டுக்கு சென்ற பெண்கள் தொடர்பில் பணியகத்துக்கு பொறுப்பேற்க முடியாது. இருப்பினும், இலங்கை பிரஜைகள் என்ற அடிப்படையில் வெளிவிவகாரத்துறை அமைச்சு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

சுற்றுலா வீசா ஊடாக வெளிநாடு செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் சனிக்கிழமை (19) பாராளுமன்ற கூட்டத்தொடர் கூடிய போது இலங்கை பணிப்பெண்கள் ஓமான் நாட்டில் பகிரங்க ஏலத்துக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஓமான் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண்கள் சுற்றுலா வீசா ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல், முறையான வழிமுறைகளை பின்பற்றாமல் சென்றுள்ளார்கள்.

இவர்கள் சுற்றுலா வீசா ஊடாக இலங்கையில் இருந்து டுபாய் நோக்கிச் சென்று, அங்கிருந்து ஓமான் சென்றுள்ளார்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் இவர்கள் பதிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய விசாரணைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா வீசா ஊடாக வெளிநாடுகளுக்கு செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது மீண்டும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி ஓமான் நாட்டில் இலங்கை பணிப்பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் பதில் பாரதூரமானது.

வெளிநாட்டு பணியகத்தில் பதிவு செய்யவில்லை என்பது இரண்டாம் பட்ச விவகாரம்.

பகிரங்கமான முறையில் இலங்கை பெண்கள் ஏலத்தில் விற்கப்படுகிறார்கள். ஆகவே இவர்களை இலங்கை பிரஜைகளாக கருதி உரிய நடவடிக்கையை எடுங்கள் என வலியுறுத்தினார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த இராஜாங்க அமைச்சர், அரசியல் ரீதியில் பிரபல்யமடையும் வகையில் இங்கு கருத்துரைக்க வேண்டாம். இவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல், இடைத்தரகர் ஊடாக முறையற்ற வகையில் சென்றுள்ளார்கள்.

இவ்விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. முறையற்ற வகையில் செல்லும் போது பணியகத்தினால் பொறுப்பேற்க முடியாது. இருப்பினும், இவர்கள் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் வெளிவிவகாரத்துறை அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மன்னார் காற்றாலை திட்டம் ரத்துச் செய்யப்படவில்லை – அதானி குழுமம்

editor

அனர்த்தத்தை குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தல்

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்!