உள்நாடுபிராந்தியம்

சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

ஹட்டன் – கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து கொட்டகலைக்கு சுற்றுலா சென்ற 60 வயதுடைய ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமது நண்பருடன் குறித்த சுற்றுலா விடுதிக்கு சென்ற அவர், நண்பருடன் நேற்று (05) மது அருந்திவிட்டு விடுதியில் கிழே விழுந்து கிடந்துள்ளார்.

பின்னர், கீழே விழுந்த நபர் மீண்டும் அறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

எனினும், குறித்த நபர் இன்று விடுதியை விட்டு வெளியில் வராமையினால், விடுதி ஊழியர் ஒருவர் இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து பொலிஸார் அந்த விடுதிக்கு வந்து சோதனையிட்ட போது, குறித்த நபர் அறைக்குள் உயிரிழந்தமையை உறுதி செய்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-செ.திவாகரன்

Related posts

ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயது நபருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

editor

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

எம்சிசி மீளாய்வு – 2 வார கால அவகாசம்