வகைப்படுத்தப்படாத

சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-மெக்சிகோவின் குயிண்டானா பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்ப்பதற்காக 31 பேர் கொண்ட சுற்றுலா குழு பேருந்தில் சென்று கொண்டிருந்தது. சச்சோபன் பகுதியில் உள்ள பழங்கால மாயன் நகரை பார்ப்பதற்காக அந்த குழு சென்றுள்ளது.

அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 12 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் கோஸ்டா மாயா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலா சென்ற இடத்தில் 12 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டும் இதே பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சர்வதேச கண்காணிப்பாளர்களை கண்டித்துள்ள துருக்கி ஜனாதிபதி

ලංකාව ඉහළ මැදි ආදායම් ලබන රටක් බවට ශ්‍රේණිගත කරයි – ලෝක බැංකුව

Cabinet approval to set up Prison Intelligence Unit