உள்நாடு

சுற்றிவளைக்கப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனம் – நால்வர் கைது!

மோசடிக் குற்றச்சாட்டுகள் காரணமாக உரிமம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட போதிலும் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு தொடர்ந்து வேலைக்கு அனுப்பிய ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு சோதனை செய்துள்ளது.

மருதானையில் ஸ்ரீ பிரியதர்சனராம மாவத்தையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று சட்டவிரோதமாக இயங்குவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 85 முறைப்பாடுகள் காரணமாக உரிமம் இடைநிறுத்தப்பட்ட குறித்த நிறுவனம், தடையை மீறி வேறொரு இடத்தில் மீண்டும் செயற்பாடுவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதன்படி, அதிகாரிகள் நிறுவனத்தின் உரிமதாரரையும், நிறுவனத்தின் மூன்று ஊழியர்களையும் கைது செய்துள்ளனர்.

அங்கு கண்டெடுக்கப்பட்ட 256 கடவுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வேலை தேடுபவர்கள் அனைவரும் பணம் அல்லது கடவுச்சீட்டை ஒப்படைப்பதற்கு முன் எந்தவொரு நிறுவனத்தின் சட்டபூர்வமான தன்மையையும் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறது.

பணம் அல்லது தனிப்பட்ட ஆவணங்களை ஒப்படைப்பதற்கு முன்னர் உரிமம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழில் உத்தரவாதங்கள் பற்றிய தகவல்களை பணியகத்தின் வலைதளமான www.slbfe.lk மூலமாகவோ அல்லது 1989 என்ற ஹொட்லைன் எண்ணை அழைப்பதன் மூலமாகவோ பெறலாம்.

Related posts

ஜனாதிபதி அநுரவின் பதில் கடிதத்திற்கு மனோ கணேசன் எம்.பி நன்றி தெரிவிப்பு

editor

வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் பலி – மருதமுனையில் சம்பவம்

editor

கடந்த 24 மணிநேரத்தில் 52 பேர் கைது