வகைப்படுத்தப்படாத

சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும்

(UTV|COLOMBO)-அனைவரும் தேசத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சுற்றாடல் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளவேண்டிய கடமைகள், பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சுற்றாடல் பேரவை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படவேண்டும்.

அத்துடன், சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது விளக்கினார்.

இதேவேளை, தேசிய சுற்றாடல் பேரவையின் புதிய தலைவராக களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யு.ஏ. சந்திரசேன தெரிவுசெய்யப்பட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

தெருக்களில் உலாவரும் முதலைகள்…

ரணவிரு சேவா அதிகார சபையின் நடமாடும் வைத்திய முகாம்

Malinga to retire after 1st ODI vs. Bangladesh