வகைப்படுத்தப்படாத

சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி தலைமையில்

(UDHAYAM, COLOMBO) – 19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்த ஆணைக்குழுக்களுக்கான புதிய முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

மேலும் ஆணைக்குழுக்களின் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது அனைத்து ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளையும் முறைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கூறினார்.

கணக்காய்வு சட்டம் உள்ளிட்ட சட்டங்களை நிறைவேற்றுதல், பணிக்குழாமை முழுமைப்படுத்தல் போன்ற குறைபாடுகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக குறித்த துறையுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ அபேகோன் ,அரச சேவைகள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, இலங்கை மனித உரமைகள் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு ஆகியவற்றின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related posts

பொகவந்தலாவயில் விபத்து

Iran bent on breaking N-treaty

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்