உள்நாடு

சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து நிமல் சிறிபாலவை நீக்குவதற்கு தடை உத்தரவு

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரால் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்த அறிக்கைக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனுவில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வாவை நீக்கியதை இடைநிறுத்தி இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதிக்கோ அல்லது கட்சியின் பொதுச் செயலாளருக்கோ அல்லது மத்திய குழுவுக்கோ அதிகாரம் இல்லை என நிமல் சிறிபால டி சில்வா தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி அநுரவுக்கும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

நீடித்து வரும் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும் மத்திய வங்கியின் ஆளுநர் IMF உதவியை எதிர்பார்க்கிறார்

பிரதமர் மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல்