கிசு கிசு

சுசில் பிரேமஜயந்தவின் பதவி எஸ்.பி’க்கு

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த வகித்து வந்த கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு பதவி எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.பி.திஸாநாயக்க தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த அண்மைய காலமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.

நாட்டின் பிரச்சினைகள் தீர்க்க முடியாத அளவுக்கு புரையோடி போயுள்ளதாகவும் வேறு ஒரு அணியிடம் நாட்டை ஒப்படைத்தாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனவும் சுசில் பிரேமஜயந்த கூறியிருந்தார்.

Related posts

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதயிறுதியில்

5 வருடங்கள் சிறைத்தண்டனை என விஜய்க்கு எச்சரிக்கை!

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் இதோ…