சூடான செய்திகள் 1

சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

(UTVNEWS | COLOMBO) -சுகாதார அமைச்சினால் நேற்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த அறிக்கையில் காய்சலுக்காக அஸ்பிரின் மற்றும் பிற ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஸ்ரிறொயிட் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்கள், அஸ்பிரின், புருபன், டைக்கிலோபெனாக், சோடியம், மெபனமிக் அசிட் மற்றும் இந்த வகையினைச் சேரந்த ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் ஸ்ரிரொயிட் வகையினைச் சேர்ந்த மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

Related posts

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஞானசார தேரர்

அவுஸ்ரேலியா இலங்கை சுற்றுலா பயணத்திற்கென விடுத்திருந்த தடை நீக்கம்

இன்று சர்வதேச அன்னையர் தினம்…அம்மா என்றழைக்காத உயிரில்லையே!