உள்நாடு

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக சஞ்சீவ முனசிங்க நியமனம்

(UTV|கொழும்பு) – சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக இராணுவ மருத்துவப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

சஞ்சீவ முனசிங்க, இராணுவ மருத்துவ சேவை முன்னாள் பணிப்பாளர் நாயகமாகவும் இராணுவ மருத்துவ படையின் கட்டளை அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த நிலையிலேயே இவ்வாறு சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் சுகாதார அமைச்சின் செயலாளராக பத்ராணி ஜயவர்தன செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

Scan Jumbo Bonanza 2023 : விசுவாசம் மிக்க 50 வாடிக்கையாளர்களுக்கு சைக்கிள்கள்

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை