சூடான செய்திகள் 1

சுகாதார அமைச்சர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTVNEWS|COLOMBO) – கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(19) சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்னிலையாகவுள்ளார்.

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை உரிய முறையில் பொறுப்பேற்காது, அரச நிதியை செலவிடுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கேவினால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி

பொது தகவல்​ தொழினுட்ப பரீட்சை முன்னோடி பரீட்சை ஆரம்பம்…

பாராளுமன்றத்திற்கு STF பாதுகாப்பு