உள்நாடு

சீரற்ற வானிலை காரணமாக பல ரயில் சேவைகள் இரத்து

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, இன்று (27) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் செல்லவிருந்த இரவு அஞ்சல் ரயில் சேவையையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த அஞ்சல் ரயில் சேவையையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவைகள் பொலன்னறுவை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், மலையக ரயில் சேவைகள் இன்று பிற்பகல் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

பௌத்த தர்மத்தின் பாதையில் சென்று மீண்டும் தன்னிறைவு பெற்ற நாடாக முன்னேறுவோம் – பொசொன் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

மே மாதம் சமர்பிக்கப்படவேண்டிய மின் கட்டண திருத்தம் எங்கே? தாமத்தப்படுத்துவதன் நோக்கம் என்ன? ஆணைக்குழு கேள்வி

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்